அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து!
Monday, March 19th, 2018
கிரேக்க தீவு பகுதியில் 22 பேர் பயணித்த அகதிகளின் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் சிலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த படகில் பயணித்தவர்கள் புகலிடம் கோரி ஆபிரிக்க நாடுகளான லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள் என சர்வதேச தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதனையடுத்து தகவலறிந்த கிரேக்க மீட்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரையில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு வந்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரத்து 800க்கும்அதிகமானவர்கள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
ஃபோக்ஸ்வாகன் மாசு சோதனை மோசடி: 15 பில்லியன் டாலர் தீர்வுத் தொகை தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
அமெரிக்காவில் இருந்து 50 இலட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி ஒப்பந்தம்!
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு பயணம்!
|
|