900 ஆண்டுகள் பழமையான தங்கக் காசுகள் கண்டுபிடிப்பு!
Thursday, December 6th, 2018தற்போது இஸ்ரேல் அமைந்துள்ள பகுதியில் இருந்த பழைய துறைமுகம் ஒன்றின் அருகே 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்கக் காசுகள் என்று கருதப்படத்தக்க வகையிலான தங்கத்தாலான நாணயங்கள் போன்று தோற்றமளிக்கின்ற பொருள்கள் சிலவற்றைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
கிணறு ஒன்றுக்கு அருகே கற்களுக்கு நடுவே இருந்த வெண்கலப் பானையில் ஒரு காதணியுடன் இந்தத் தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யாரோ ஒருவரால் இவை புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றை அவர் திரும்ப எடுக்கவில்லை என்று நம்பப்படுகின்றது. 1100ஃ1118 ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் நடந்த போரில் இதைப் புதைத்து வைத்தவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Related posts:
குல்தீப் யாதவை தேர்ந்தேடுத்ததற்கு பதில் அளித்த விராட் கோஹ்லி!
பென் ஸ்டொக்ஸ் நிரபராதி - மீண்டும் அணியில்!
காலிறுதி சுற்றுக்கு அண்டி மரே முன்னேற்றம் !
|
|