45 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி!

Thursday, January 3rd, 2019

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக Martin Guptill 138 ஓட்டங்களையும் Kane Williamson 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் பெரேரா தனது 4 ஆவது ஒருநாள் சதத்தை அடித்து 102 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 76 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் நீஷாம் 3 விக்கெட்டுக்களையும் போல்ட், சோதி, பர்கியூஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதற்கமைய இலங்கை அணி 45 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

Related posts: