2021 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி: புதிய திகதி அறிவிப்பு!

Tuesday, March 31st, 2020

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதமே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts: