17 வயது கோலூன்றிப் பாய்தலின் 3 பதக்கங்களும் வடக்கிற்கு!

Monday, October 17th, 2016

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று வரும் தேசிய மட்ட தடகளப்போட்டியில் முதல் மூன்று பதக்கங்களையும் வடமாகாண வீரர்கள் கைப்பற்றினர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று இடம்பெற்ற 17 வயதுக்குட்பட்ட ஆண்களிற்பான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த அ.புவிதரன் 3.80 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த ர.யதுர்சன் 3.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த உ.சுலக்சன் 3.50 மீற்றர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

IMG_20161017_162757

Related posts: