தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைவு!

Thursday, September 26th, 2019


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் தன்னார்வ படைப் பிரிவின் அதிகாரியாக தினேஸ் சந்திமால் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இராணுவ கிரிக்கெட் அணியில் விளையாடும் நோக்கில் தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைந்து கொண்டதாக இராணுவப் பேச்சாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts: