கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கெளரவம்!

Thursday, August 4th, 2016

ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஜோதியை ஏற்றிவைக்க பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் திருவிழா பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நாளை 5ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடக்கிறது.இந்த போட்டிகளின் தொடக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிகள் முடிந்த பின்னர் அடுத்த முறை எந்த நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்துமோ அந்த நாட்டிடம் ஒலிம்பிக் ஜோதி ஒப்படைக்கப்படும்.இந்நிலையில் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மாரக்கானா விளையாட்டரங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் ஜோதியை ஏற்றிவைக்க முன்னாள் பிரேசில் கால்பந்து பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பீலே கூறுகையில், பிரேசில் நாட்டை சேர்ந்தவன் என்ற முறையில் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க நான் மிகவும் விரும்புகிறேன்.

சில நிறுவனங்களுடன் முன்னரே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த திகதியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க அனுமதி கிடைக்குமா? என்று அவர்களுடன் கலந்துபேசி ஆலோசித்த பின்னர் எனது முடிவை நாளை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

Related posts: