சிறந்த கிரிக்கட் வீராங்கனையாக எல்சி பெரீ !

Wednesday, December 18th, 2019


2019ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் எல்சி பெரீ வென்றுள்ளார்.

இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக எல்சி பெரீ தெரிவாகியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வீராங்கனை எலீசா ஹீலி இவ்வாண்டின் சிறந்த 20க்கு 20 வீராங்கனைக்கான விருதினை பெற்றுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கட் பேரவையினால் சிறந்த 20க்கு 20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான வீராங்கனைகளின் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. குறித்த இரண்டு அணிகளுக்கும் தலைவர்களாக அவுஸ்திரேலிய வீராங்கனைகள் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

Related posts: