லசித் மாலிங்க மீண்டும் அதிரடி: 5 விக்கற்றுக்களால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Tuesday, April 16th, 2019

ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 7 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ், 19 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது

புள்ளிப்பட்டியல் படி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் 3ம் இடங்களில் உள்ளன.

கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் தலா 8 புள்ளிகளைப் பெற்று ஓட்ட விகித அடிப்படையில் நான்காம் மற்றும் 5ம் இடங்களில் உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதாராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் இறுதி மூன்று இடங்களில் உள்ளன.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் லசித் மாலிங்க 04 ஓவர்களில் 4 விக்கட்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: