ஹேரத் ஒரு துப்பாக்கி – எச்சரிக்கும் மைக் ஹசி!

Thursday, July 21st, 2016

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் அவுஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று மைக் ஹசி கூறியுள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 26ம் திகதி பல்லேகெலாவில் நடக்கிறது.

இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கூறுகையில், கடைசியாக அவுஸ்திரேலியா இலங்கை வந்த போது நாதன் லயன் அறிமுகமானார். இவரும் ஸ்டீவ் ஓ’கேபியும் சுழலில் அசத்த காத்திருக்கின்றனர். அதே போல் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹாசில்வுட் ஆகியோர் வேகத்தில் மிரட்ட உள்ளனர்.

துணைக் கண்டத்தில் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடி பெரிய ஓட்டங்களை குவிப்பது என்பது சவாலான விடயமாகும்.. இந்த தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹேரத் அவுஸ்திரேலிய வீர்ர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார். அவர் ஒரு துப்பாக்கி போல செயல்படுவார்.

தனி நபராக அணி மீதான அழுத்தத்தை நாள் முழுவதும் தாங்கிக் கொள்ளக் கூடியவர். ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் அவருக்கு எதிராக வித்தியாசமாக ஆட வேண்டும். சரியான திட்டம் இல்லை என்றால் அவர் உங்களை எளிதில் வீழ்த்தி விடுவார் என்று கூறியுள்ளார்

Related posts: