விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் ரோபோ !!

Wednesday, March 14th, 2018

விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

65 சென்டிமீட்டர் நீளமும் 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினைப் போல முடியையும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது.

காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது.

விலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருவதுடன், ஊளையிடவும் தொடங்கும்.

சூரிய ஆற்றல் பேட்டரிகள் மூலம் இது செயற்படும். இந்த ரோபோ ஓநாய் இருக்கும் பகுதிகளில், பயிர் இழப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டன என ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன்பு கிசாருசு நகரத்தில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விளையும் பயிர்களில் ஒரு பகுதியை காட்டுப்பன்றிகளிடம் இழந்து வந்தனர்.

ஒரு மின் வேலியினை விட இந்த ரோபோ ஓநாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயக் கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது.இதன் விலை 4,840 டொலர்கள் ஆகும்.

Related posts: