விரைவில் ஓய்வு – கிறிஸ்டியானோ ரொனால்டோ !

Thursday, August 22nd, 2019


கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்த வருடம் ஓய்வு பெறுவேன் என கூறியுள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியின் Juventus அணிக்காக விளையாடி வருகிறார்.

கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்து பல சாதனைகளை படைத்ததோடு, பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

உலகளவில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை பெற்றிருக்கும் ரொனால்டோவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருடைய ஓய்வு குறித்து கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அவர், “நான் அதைப்பற்றி யோசித்ததில்லை. ஒருவேளை நான் அடுத்த வருடம் எனது கால்பந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம்௪ ஆனால் என்னால் 40 அல்லது 41 வரை விளையாட முடியும்” என ஐந்து முறை பாலன் டி விருது வென்ற ரொனால்டோ தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், நான் எப்போதும் சொல்வது இந்த கணத்தை அனுபவிக்க வேண்டும். இந்த நேரம் சிறந்தது. நான் அதனை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ரொனால்டோவின் இந்த திடீர் அறிவிப்பால் உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Related posts: