விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு முன்னேறினார் ரொஜர் பெடரர்!

Wednesday, July 6th, 2016

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், அமெரிக்காவின் சாம் கியூரி, குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற  ஆடவர் ஒற்றையர் 4ஆவது சுற்றில் ரொஜர் பெடரர் 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை தோற்கடித்தார்.

இதன்மூலம் விம்பிள்டனில் 14ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் பெடரர். இதுதவிர கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 306ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் ‘ஓபன் எரா’வில் அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றவரான மார்ட்டினா நவரத்திலோவாவின் சாதனையை சமன் செய்துள்ளார். காலிறுதியில் மரின் சிலிச்சை சந்திக்கிறார் பெடரர்.

அமெரிக்காவின் சாம் கியூரி 6-4, 7-6 (5), 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹத்தை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் 4ஆவது சுற்றில் ஸ்லோவாக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-3, 5-, 9 – என்ற செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-7 (5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தினார். ஜேர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6- 3, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் மிசாகிடாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருந்த ஜப்பானின் நிஷிகோரி விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நிஷிகோரி தனது 4ஆவது சுற்றில், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடினார். அதில் சிலிச் 6 -1, 5-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயத்தால் போட்டியிலிருந்து விலகினார் நிஷிகோரி.

Related posts: