வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் மன்னார் எப்.சி. அணி வெற்றி!

வடக்கு – கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின் இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி இரவு நடைபெற்ற போட்டியில் மன்னார் எப்.சி. அணியை எதிர்த்து நொதேர்ன் எலைட் அணி மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் எலைட் அணிக்கு மிகவும் இலகுவான இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன.
எனினும் அதனை கோலாக்குவதில் அவர்கள் தவறவிட்டனர். அதன்பின்னர் சுதாகரித்து ஆடிய மன்னார் அணி சரியான போராட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் கோல் எதனையும் பதிவு செய்யாத வகையில் முதற்பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியாட்டமும் சந்தர்ப்பங்களை சரியாக முடிக்காத ஆட்டமாக தொடர்ந்தது. போட்டியின் இறுதி நேரத்தில் மன்னார் எப்.சி. அணி தனது முதலாவது கோலை அடித்தது. ஆட்டநேரம் முடியும் வரையில் அந்த கோல் நீடிக்க மன்னார் எப்.சி அணி 1:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
Related posts:
|
|