லியோனல் மெஸ்ஸி அதிரடி அறிவிப்பு!

Wednesday, November 16th, 2016

அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்கள் இனி மீடியாக்களுடன் பேச மாட்டார்கள் என அந்த அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கொலம்பியா அணியை அர்ஜெண்டினா அணி எளிதாக வென்றது. அந்த அணியின் தலைவர் மெஸ்ஸி ஒரு கோலடித்தார்.

அந்த ஆட்டம் முடிந்தவுன் தன் அணி வீரர்களுடன் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், எங்கள் அணி வீரர் லாவெஸ்ஸி போதை பொருட்கள் உட்கொண்டதாக மீடியாக்கள் அவரை மிக கடுமையாக விமர்சனம் செய்தது.எங்கள் விளையாட்டை பற்றி மட்டுமே உங்களுக்கு விமர்சனம் செய்வதற்கு உரிமை இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் அவரை விமர்சனம் செய்தது மிக பெரிய தவறாகும்.

இதற்கு முடிவு கட்டும் விதமாக இனி எங்கள் அணி வீரர்கள் யாரும் மீடியாவுடன் பேச மாட்டார்கள் நாங்கள் உங்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: