ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் – உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது கட்டார் !

Sunday, November 27th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில், தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில் போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

காட்டார் அணி தான் சந்தித்த முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தமை இதுவே முதன்முறையாகும்.

இதனை தொடர்ந்து, 2-வது லீக் சுற்றில் செனக்கல் அணியை எதிர்கொண்ட கட்டார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கட்டார் அணி எதிர்கொள்கிறது.

எனினும், முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் குழு “ஏ“ புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள கட்டார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கிண்ணத் தொடரிலும் இருந்து வெளியேறியுள்ளது. இது கட்டார் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related posts: