யாழ்ப்பாணம் இந்துவுக்கு மூன்றாவது இடம்!

Sunday, May 6th, 2018

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தை தனதாக்கியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் அண்மையில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது.

முதலாவது கால்பாதியை 12:05 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி. இரண்டாவது கால்பாதியை 16:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி. முதல் பாதியின் முடிவில் 27:21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி.

மூன்றாவது கால்பாதி ஆட்டத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 23:13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது. நான்காவது கால்பாதி ஆட்டத்தை 22:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி. முடிவில் 67:56 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி.

Related posts: