மேற்கிந்திய தீவுகள் வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டுகள் தடை?

Sunday, July 17th, 2016

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸ்சல் 3 முறை ஊக்கமருந்து சோதனையை புறக்கணித்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக உலகக்கிண்ண வெல்ல சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸ்சல் முக்கிய பங்கு வகித்தார். இவர் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் போட்டியில் ஆடி வருகிறார். தவிர, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காகவும் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஊக்க மருந்து விதி முறைகளை மீறியது தெரிய வந்துள்ளது. கடந்த 12 மாதத்தில் அவர் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் நடவடிக்கை குழு வருகிற 20ம் திகதி ஜமைக்காவில் அவரிடம் விசாரணையை நடத்துகிறது.

ஊக்க மருந்து சோதனையை 3 முறை புறக்கணித்தது ஊக்க மருந்து உட்கொண்டதற்கு சமமானது. இதனால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related posts: