மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, July 15th, 2023

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 5 விக்கட்டுக்களை இழந்து 421 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்திய அணி சார்பில், துடுப்பாட்டத்தில், தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய யஷஷ்வி ஜெய்ஷ்வால், 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அணித்தலைவர் ரோஹிட் சர்மா, 103 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 130 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

பந்துவீச்சில், ரவிச்சந்திரன் அஸ்வின், அதிகபட்சமாக 7 விக்கட்டுக்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக, யஷஷ்வி ஜெய்ஷ்வால் தெரிவானார்.

Related posts: