அணிக்கு தெரிவு செய்யப்பட்டாலும் மாலிங்கவுக்கு விளையாடும் வாய்ப்பு இல்லை –  திலங்க சுமதிபால!

Tuesday, April 25th, 2017

ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணியில் உள்வாங்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாடுவது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது பயிற்சிப் போட்டியின் போது பந்து வீசும் முறையிற்கு அமையவே என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த பயிற்சிப் போட்டியில் லசித் மாலிங்க 10 ஓவர்களிலும் பந்து வீசும் முறைமையினை கவனத்திற் கொண்டே ‘சாம்பியன் கிண்ணம்’ போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என தீர்மானிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. ‘சாம்பியன் கிண்ண’ போட்டிக்கான இலங்கை அணியினரை அறிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று(24) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற போதே சுமதிபால அவர்கள் மாலிங்க குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“அவரது உடற்கட்டமைப்பில் பிரச்சினைகள் இல்லை. என்றாலும் 10 ஓவர்கள் பந்து வீசும் அளவுக்கு அவரது உடல் ஈடுகொடுக்காது. அவருக்கு ஓவர் 3 அல்லது 4 அளவில் மட்டுமே வீச இயலுமான நிலையில் இருக்கிறார். அவர் ஐ.பி.எல் போட்டிகளுக்கு செல்லும் முன்னர் கூறியிருந்தார் 10 ஓவர்கள் வீசுவதற்கு தான் தயார் நிலையில் உள்ளதாக..”

“என்றாலும் அவர் தற்போது 10 ஓவர்கள் வீசும் நிலைக்கு தேர்ந்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளின் போதும் அவருக்கு போதுமான பயிற்சிகளுக்கு நேரம் கிடைக்கிறது. நாமும் மாலிங்கவினை நம்புகிறோம்..” என கிரிக்கெட் நிறுவன தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: