100 மில்லியன் அமெரிக்க டொலர்:  பெடரர்  சாதனை!

Tuesday, January 31st, 2017

பெடரர் 100 மில்லியன் அமெரிக்க ​டொலரை தொட்டு டென்னிஸ் உலகில் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை பெற்றார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்சிலம் பட்டம் வென்று ரோஜர் பெடரர் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் என்பதை நிரூபித்து காட்டினார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்திரேலிய பகிரங்கம் கடந்த 15 தினங்களாக மெல்போர்ன் நகரில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் சம்பியன் பட்டம் பெற்று 23-வது கிராண்ட்சலமை கைப்பற்றினார்.

இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) -9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள். 5 செட்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று சம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 17 நிமிட நேரம் தேவைப்பட்டது.

35 வயதான பெடரர் கைப்பற்றிய 18-வது கிராண்ட்சலாம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அவர் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து சகாப்தம் படைத்து வருகிறார். அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் 5-வது முறையாக வென்றார்.

பகிரங்க போட்டியின் அதிக வயதில் கிராண்ட்சலம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு 35 வயது 5 மாதம் 21 நாட்கள் ஆகிறது. இதற்கு முன் 1972-ம் ஆண்டு ரோஸ்வெல் தனது 37-வது வயதில் அவுஸ்திரேலிய பகிரங்கத்தை வென்று இருந்தார்.

மேலும் பெடரர் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கிராண்ட்சலம் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012-ம் ஆண்டு விம்பிள்டனை வென்று இருந்தார்.

ரபெல் நடாலை கிராண்ட்சலம் இறுதிப்போட்டியில் பெடரர் வீழ்த்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 6 முறை தோற்று இருந்தார்.

சம்பியன் பட்டம் வென்ற பெடரருக்கு ரூ.19 கோடியும், 2-வது இடத்தை பிடித்த நடாலுக்கு ரூ.9 கோடியும் கிடைத்தன.

இதன்மூலம் பெடரர் 100 மில்லியன் அமெரிக்க டொலரை தொட்டு டென்னிஸ் உலகில் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை பெடரர் பெற்றார். அவர் ரூ.697 கோடி டென்னிஸ் விளையாட்டு மூலம் சம்பாதித்து உள்ளார்.

87col144512830_5177772_30012017_AFF_CMY

Related posts: