மேன்முறையீடு செய்த தனுஸ்க குணதிலக்க!

ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
அண்மையில் இடமபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விதியை மீறி நடந்து கொண்டமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்விற்கு 6 ஒருநாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருடாந்த சம்பளத்தில் 20 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அணியில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்ளல், போட்டிகளுக்கு இடைநடுவே விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், மதுபானம் அருந்துதல், போட்டிகளுக்காக உரிய நேரத்தில் சமூகமளிக்காமை, உடற் தகுதி சோதனையில் கலந்து கொள்ளாமை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய தொடருக்கு குமார் தர்மசேனவுக்கு வாய்ப்பு!
சாம்பியன்ஸ் கிண்ண தோல்வியின் எதிரொலியே இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் விலகக் காரணம்!
இங்கிலாந்து- பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று!
|
|