மெசியை முந்திய ரொனால்டோ!

Wednesday, October 25th, 2017

2017ஆம் ஆண்டு ஃபிஃபா விருது வழங்கல் நிகழ்வில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் விளையாட்டு வீரருக்கான விருது போர்த்துகல் மற்றும் ரியல் மெட்ரிட் வீரர் கிருஸ்டியானோ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியலில் லியோனால் மெசி மற்றும் நெய்மர் ஆகியோரும் முன்னிலையில் இருந்தனர். இலண்டனில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் காற்பந்து பயிற்றுவிப்பாளருக்கான விருது ரியல் மெட்ரிட் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் சினெடைன் சிடேனுக்கு வழங்கப்பட்டது.

அதேநெரம், சிறந்த பெண் காற்பந்து வீரருக்கான விருது பார்சிலோனாவின் லீக் மார்டின்ஸுக்கும், நெதர்லாந்தின் பயிற்றுவிப்பாளர் செரீனா வீக்மெனுக்கு சிறந்த பெண் காற்பந்து பயிற்றுவிப்பாளருக்குமான விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்சனல் வீரர் ஒலிவியர் ஜிரோட் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல் இட்டமைக்காக புஸ்காஸ் விருதினைப் பெற்றுக் கொண்டார்

Related posts: