மூன்றாவது டெஸ்ட் போட்டி பதிலடி கொடுக்குமா இலங்கை!

Thursday, June 9th, 2016

இங்­கி­லாந்­து–­இ­லங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது

இலங்கை கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வருகிறது.

3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸில் நடை­பெற்­றது. இந்தப்போட்­டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­திலும், செஸ்டர்லீஸ்டீரிட்ரில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்­டியில் 9 விக்­கெட்­டுக்கள் வித்தியாசத்திலும் இங்­கி­லாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்­பற்­றி­விட்­டது

3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதா­னத்தில் தொடங்­கு­கி­றது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முழு­மை­யாக கைப்­பற்ற இங்­கி­லாந்து முயற்­சிக்கும்

அதே­வேளை ஆறுதல் வெற்­றி­யையா­வது பெற்­று­விட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி கள­மி­றங்­கு­கின்­றது

பொது­வாக இங்­கி­லாந்­துக்கு டெஸ்ட் தொடர் விளை­யாட செல்லும் அணி­க­ளுக்கு மிகப்­பெ­ரிய சிக்­கல்கள் உண்டு. அங்­குள்ள சூழ்­நி­லையில் மற்ற அணிகள் விளை­யா­டு­வது மிகக்­க­டினம். சில நேரங்­களில் இங்­கி­லாந்­திற்கு ஈடு­கொ­டுக்க முடி­யாத பரி­தாப நிலைமை கூட ஏற்­படும். காரணம் அந்­நாட்டின் கால­நிலை மற்றும் மைதா­னங்­களின் தன்மை. தற்­போது இலங்கை அணிக்கு இதே நிலை­மைதான் ஏற்­பட்­டுள்­ளது

அது­த­விர முன்­னணி வீரர்­களின் காயம் கார­ண­மா­கவும் இலங்கை அணி பின்­ன­டைவை சந்தித்­துள்­ளது. குறிப்­பாக 2014ஆம் ஆண்டு இவ்­விரு அணி­க­ளுக்­குமிடையில் நடை­பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்­றது

இதில் அபா­ர­மாக பந்து வீசி வெற்­றிக்கு உத­விய இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் தம்­மிக்க பிரசாத் காயம் கார­ண­மாக தொட­ரி­லி­ருந்து வில­கினார்.

அவரைத் தொடர்ந்து தசுன் சானக்க வில­கினார். இதனால் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு சற்று பல­வீ­ன­ம­டைந்­தது. இந்தப் போட்­டியில் புது­முக வீரர் சமிந்த பண்­டார இணைக்கப்ப­டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: