மூன்றாம் பிரிவு துடுப்பாட்டம்: கிண்ணத்தை வென்றது ஜொனியன்ஸ் அணி !

Monday, October 10th, 2016

இலங்கை கிரிக்கெட் சபை தனது மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையில் நடத்திய துடுப்பாட்ட தொடரில் ஜொனியன்ஸ் அணி சாம்பியனானது. ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில், ஜொனியன்ஸ் அணியை எதிர்த்து கே.ஸி.ஸி.ஸி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி.ஸி அணி 35.5 பந்துபரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமான நிசாந்தன் 30 ஓட்டங்களையும், சசிதரன் 21ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணியிண் சார்பில் டக்சன் 4 இலக்குகளை வீழ்த்தினார். 137 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி, 13பந்துபரிமாற்றங்களில் 3இலக்குகளை இழந்து இலக்கை அடைந்தது.அதிகபட்சமாக கானாமிர்தன் 50 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் கே.ஸி.ஸி.ஸி அணியின் சார்பில் உத்தமக் குமரன் 2 இலக்குகளை வீழ்த்தினார்.

article_1467632682-InserjfjjdyhLEAD-(3)

Related posts: