முரளிதரனுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த ஹெரத்!

Friday, November 11th, 2016

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ரங்கன ஹேரத் அந்த நம்பிக்கையை காப்பற்றியுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக மட்டுமல்லாது, தனது வழமையான வித்தையையும் காட்டி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2வது டெஸ்டிலும் 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் ஹேரத் முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2வது இன்னிங்சில் 8 விக்கெட் என மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

முதல் போட்டியில் வீழ்த்திய 6 விக்கெட்டுகளையும் சேர்த்து அவர் இந்த தொடரில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தவிர, அவர் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார். முத்தையா முரளிதரனுக்கு (66 போட்டி) பிறகு குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஸ்பின்னர் என்ற பெருமையும் ஹேரத் (75 போட்டி) பெற்றுள்ளார்.

9-1-620x330

Related posts: