முக்கோண தொடர்: முதல் வெற்றியை ருசித்தது மேற்கிந்தியத் தீவுகள்!

Sunday, June 5th, 2016

அவுஸ்திரேலிய,தென்னாபிரிக்கா, மற்றும் மேற்கிந்திய தீவுஅணிகள் மோதும் முக்கோண ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நேற்றுமுன்தினம்  ப்ரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதில் 4 விக்கட்டுக்களால் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்க அணி சார்பில் ரிலி ரொசொவ் 61 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாகப் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் 27 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48 .1  ஓவரில் 6 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்து வெற்றி அடைந்தது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கிரன் பொலாட் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

Related posts: