மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரா?

Thursday, December 15th, 2016

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடும் எண்ணம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நிஜாம் சேத்தி மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அடுத்த ஆண்டு இந்த அணிகளில் ஒன்று பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் வெளியான இந்த தகவலுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் ஜயசேகர தயாசிறி கூறுகையில், இலங்கை இராணுவ வீரர்களை அனுப்பி வைக்க பாகிஸ்தானில் இருந்து கோரிக்கை வந்தது. இது குறித்து நாங்கள் முடிவெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் அங்கு அனுப்பும் திட்டம் துளிகூட இல்லை என்று கூறியுள்ளார்.

Pakistan-Cricket-Board-1

Related posts: