மீண்டும் களமிறங்கும் மலிங்கா!

Wednesday, February 21st, 2018

முத்தரப்பு போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா.

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரின் நடவடிக்கைக்கு பின்னர் கடந்தாண்டு செப்டம்பர் முதல் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் விலகியிருந்தார் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா.

இதனால் அவரது ரசிகர்கள் சோர்வடைந்திருந்த நிலையில் ஐபிஎல் ஏலத்திலும் மலிங்கா எடுக்கப்படாதது அவருக்கு கூடுதல் ஏமாற்றமாக அமைந்தது.

ஆனால், உள்நோட்டு போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை மலிங்கா வெளிப்படுத்தும் பட்சத்தில் மீண்டும் அவர் அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற தகவல்கள் பரவி வந்தன.இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் தொடங்க இருக்கும் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்குபெறும் Nidahas தொடரில் மீண்டும் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்திருந்தாலும் மலிங்காவின் உடல் தகுதியை பொருத்தே அவரது தெரிவு இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: