ஐ.பி.எல் தொடர்: புதிய சாதனை படைத்த சுனில் நரேன்!

Wednesday, April 18th, 2018

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை, கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் படைத்துள்ளார்.

ஐ.பி.எல்-யில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன்மூலம், அவர் ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்தார். மேலும், 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

சுனில் நரேன் இதுவரை 86 போட்டிகளில் 102 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதில் 6 முறை 4 விக்கெட்டுகளும், ஒரு முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

மொத்தமாக 336 ஓவர்கள் வீசி, 2113 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்துள்ள நரேனின் சராசரி 6.28 ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் சுனில் நரேன் விளையாடிய போது, அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுத்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு தடை ஏதும் விதிக்கப்படாமல் எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: