மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!

Wednesday, February 22nd, 2017

பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாக். சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் செல்வதற்கு பல வீரர்கள் ஆதரவளித்துள்ள போதும், முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், லாகூரில் நடக்கவிருந்த போட்டியில் பங்கேற்க சென்ற போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு தேசிய கிரிக்கெட் அணிகள் செல்ல மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

dfsfg1

Related posts: