ஒலிம்பிக்: வட கொரியா வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு?

Sunday, August 14th, 2016

பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போடடியில் பங்கேற்றுள்ள வட கொரியா வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம்-யோங் அன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 11,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் வட கொரியா நாட்டை சேர்ந்த 31 வீரர்களும் அடங்குவர்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி தோல்விகளை சந்திக்கும் அனைத்து வீரர்களுக்கும் சாம்சங் நிறுவனம் Samsung Galaxy S7 Special Edition மொடல் ஸ்மார்ட்போன்களை பரிசாக அளித்து வருகிறது.

ஆனால், இந்த பரிசு பொருளை வட கொரியா வீரர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட கொரியா சர்வாதிகாரியான கிம்-யோங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏனெனில், வட கொரியா நாட்டின் பரம எதிரியான தென் கொரியா நாட்டில் தான் சாம்சங் கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்படுவதே இந்த உத்தரவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் பிற நாட்டு வீரர்களுடன் தேவையில்லாமல் பேசக் கூடாது என்றும், ஓய்வு நேரத்தில் வெளியிடங்களுக்கு சென்று சுற்றக்கூடாது எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வட கொரியா வீரர்கள் இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்க்கொண்டு வந்தாலும் கூட, 31 வீரர்களில் ஒருவரான Rim Jong-sim என்ற வீராங்கனை பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

வட கொரியா நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் ஒலிம்பிக் தங்க பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: