மத்யூசை தவிர்த்திருக்கக் கூடாது – ரணதுங்கா

Monday, August 28th, 2017

இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து விலக மேத்யூசிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருக்கக் கூடாது என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் அர்ஜுன் ரணதுங்கா கூறியுள்ளார்.

மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் மீது பல்வேறு விமர்ச்சனங்கள் எழுந்தது

இதைத் தொடர்ந்து மேத்யூசும் மூன்று வகையான தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் இலங்கை அணிக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான அர்ஜுன் ரணதுங்கா, இலங்கை கிரிக்கெட் வாரியம் மேத்யூசை தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு அனுமதி அளித்திருக்ககூடாது

அவரை இன்னும் சில காலங்கள் தலைவராக இருக்க கூறி வலியுறுத்திருக்கலாம், ஏனெனில் அவர் தலைமையிலான இலங்கை அணி தான் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது, அவுஸ்திரேலியாவையும் வொயிட் வாஷ் செய்தது.

Related posts: