புதிய மைல்கல்லை எட்டி குமார் தர்மசேன !

Tuesday, September 19th, 2017

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவராக செயற்பட்டுவரும் குமார் தர்மசேன கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் நடுவராக பணியாற்றியதன் மூலம் கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் குமார் தர்மசேன இடம்பிடித்துள்ளார்.

2010 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் 46 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக செயற்பட்டுள்ள தர்மசேன, 2009-2017 வரையிலான காலப்பகுதியில் 82 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் நடுவராக செயற்பட்டுள்ளார்.தர்மசேனவிற்கு முன்னர் , இலங்கை அணி சார்பில் அசோக த சில்வா 150 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: