பி.எஸ்.ஜி கழகத்தில் இருந்து விடைபெறும் லயனல் மெஸ்ஸி!

ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி இப்பருவ இறுதியோடு பி.எஸ்.ஜி (PSG) உதைபந்தாட்ட அணியிலிருந்து வெளியேறவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனை மெஸ்ஸியின் தந்தையும் முகவருமான ஹோஹே மெஸ்ஸி (Jorge Messi) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தகவலை இத்தாலியைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர்களுக்கான அதிகாரியான பாப்ரிஸியோ ரொமானோவும் (Fabrizio Romano) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் சுற்றுலாத் துறை விளம்பரத்துவதற்காக மெஸ்ஸி அனுமதியின்றி சவுதி அரேபியாவுக்குச் சென்றதால் PSG நிர்வாகம் அவருக்கு 2 வாரங்களுக்குச் சம்பளம் வழங்காமல் விளையாடவும் தடை விதித்தது.
இதனாலே லயனல் மெஸ்ஸி ஒப்பந்தத்தை நீடிக்க மறுத்திருக்கின்றார் என பிரான்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசியாவின் முதலாவது மென்சிவப்பு டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
சாம்பியன் கிண்ணத்தில் மோதும் நியூசிலாந்து அணியினர் விபரம்..
இலங்கை அணி படுதோல்வி!
|
|