பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்கிறார் தினேஷ் கார்த்திக்!

Friday, June 2nd, 2017

இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில்,  நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதே அணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும், குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எப்போதும் அற்புதமாகவே இருக்கும். இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன், சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இந்த அளவு உயர்ந்துள்ளதற்கு எனது பெற்றோரே காரணம் என தெரிவித்துள்ளார்.

Related posts: