பந்துவீச்சு சர்ச்சையில் வங்கதேச வீரர்கள்! கொதிப்படைந்த ரசிகர்கள்

Saturday, March 12th, 2016

வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது, அராபத் சன்னி ஆகியோர் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாக புகார் எழுந்துள்ளது.

டி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, சுழற்பந்து வீச்சாளர் அராபத் சன்னி ஆகியோரின் பந்துவீச்சு, விதிமுறையை மீறி சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக ஆடுகள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வங்கதேச அணி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவர்களது பந்து வீச்சு சோதனைக்குட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஸ்கின் அகமது, அராபத் சன்னி மீது புகார் கூறியதால் வங்கதேச ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சையையும், தஸ்கின் அகமதின் பந்துவீச்சையும் ஒப்பிட்டு புலம்பி வருகின்றனர்

Related posts: