நீலங்களின் போர் இன்று ஆரம்பம்!

Friday, June 8th, 2018

நீலங்களின் போர் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.

2008 ஆம் ஆண்டு இரு கல்லூரிகளுக்கும் இடையிலான கடினப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆரம்பமாகின. முதலாவது ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. அதன்பின்னர் உள்நாட்டுப் போர் காரணமாக 2013 ஆம் ஆண்டு வரையில் ஆட்டங்கள் இடம்பெறவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி வெற்றிபெற்றது. 2015 ஆம், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டங்களில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

Related posts: