நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவு!

Saturday, August 5th, 2017

அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபைக்கும், அந் நாட்டு வீரர்களுக்கும் இடையில் தொடர் கதையாக நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

இருதரப்பினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அத்தோடு வீரர்களுக்கு சம்பளம் வழங்க 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை ஒப்புக்கொண்டது. இந்த ஊதிய ஒப்பந்தத்தில் முதல் முறையாக கிரிக்கெட் வீராங்கனைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊதிய பிரச்சினையால் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்திருந்த பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் உயிர்பெற்றுள்ளது.சம்பளம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்படாததால், சுமார் 230 கிரிக்கெட் வீரர்களும், வீராங்கனைகளும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: