நிரோஷன் டிக்வெல்ல தொடர்பில் விராட் கோலி!

Saturday, November 25th, 2017

இலங்கை கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல, இலங்கை கிரிக்கட் அணிக்கு சிறப்பான பல பணிகளை செய்யும் இயலுமை கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை முதலாவது டெஸ்ட் போட்டியில் நேரத்தை கடத்தும் வகையில் நிரோஷன் டிக்வெல்ல மேற்கொண்ட சில செயற்பாடுகளால் விராட் கோலி அதிருப்தி அடைந்ததாக கருதப்பட்டது. ஆனால் அவரது செயற்பாடுகள் தொடர்பில் தாம் ஈர்ப்பு கொண்டதாகவும், அவரிடம் சிறப்பான சில இயல்புகளைக் காண்பதாகவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

அவரது இயல்பு இலங்கை அணிக்கு விசேடமாக எதையாவது வழங்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: