அடுத்த ஆண்டு விடைபெறுகிறார் உசைன் போல்ட்?

Sunday, October 16th, 2016

 

ஜமைக்காவில் நடைபெறும் ‘ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்’ தொடருடன் சொந்த மண்ணில் இருந்து வேகப்புயல் உசைன் போல்ட் விடைபெறுகிறார்.

ஜமைக்காவின் வேகப்புயல் உசைன் போல்ட், ஓட்டப்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். கடந்த மூன்று ஒலிம்பிக்கிலும் (சீனா, லண்டன் மற்றும் பிரேசில்) தொடர்ந்து 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டப் பந்தயத்தில் இவரை வெல்வதற்கு ஆளில்லாமல் இருக்கிறது. புகழின் உச்சத்தில் இருக்கும் உசைன் போல்ட், லண்டனில் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் திகதி முதல் 13- ஆம் திகதி வரை நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருடன் தனது ஓட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வரும் யூன் மாதம் அவரின் சொந்த நாடான ஜமைக்காவில் ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற இருக்கிறது. இதுதான் அவரது சொந்த ஊரில் ஓடும் கடைசி ஓட்டமாக இருக்கப்போகிறது.இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில், ஜமைக்கா மக்களுக்காக நான் ஓடும் கடைசி ஓட்டம் ரேசர்ஸ் கிராணட் பிரிக்ஸ்தான். ஜமைக்காவில் ஓடும் என்னுடைய கடைசி ஓட்டம் இதுவாக இருக்கப்போகிறது.லண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடருக்குப்பிறகு நான் ஓய்வு பெறப்போகிறேன். அது என்னுடைய கடைசி ஓட்டம்’’ என்றார்.

Bolt-400x200

Related posts: