நாய் உணவை உண்டதால் அவதியுற்ற செரீனா

Sunday, May 15th, 2016
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த செரீனா தனது நாயுடன் உணவருந்த சென்றுள்ளார்.அங்கு நாய்களுக்கான உணவை வாங்கி தனது செல்ல நாயான சிப்க்கு வழங்கியுள்ளார்.

அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை அம்மனி நாயின் உணவு எப்படி இருக்கும் என தானும் கொஞ்சம் சாப்பிட்டு சுவை பார்த்துள்ளார். நமக்கு எதுக்கு இந்த வீர விளையாட்டு. அப்புறம் என்ன கழிப்பறைக்கும், ரூமுக்கும் இடையே ஒரே ஓட்டப்பந்தயம் தான்.

சுமார் ஒரு மணி நேரம் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளார் செரீனா வில்லியம்ஸ். வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாலும், டென்னிஸ் போட்டியில் பங்கேற்று சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டினா மெக்ஹலேவை தோற்கடித்து ஆச்சரியம் அளித்துள்ளார்.

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், தான் நாய் உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாலும், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தான் நம்பர் ஓன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

Related posts: