இதயம் கனக்கின்ற சுமையுடன் விடைபெற்ற டில்ஷான்!

Sunday, September 11th, 2016

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கின் தனது பிரி­யா­விடைப் போட்­டியில் பங்­கு­கொண்ட இலங்கை அணியின் டில்ஸ்கூப் மன்னன் தில­க­ரட்ண டில்ஷான் கனத்த இத­யத்­துடன் 17 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்­கையை முடித்­துக்­கொண்டார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான 2 ஆவதும் இறு­தி­யு­மான இரு­ப­துக்கு 20 போட்டி கொழும்பு ஆர். பிரே­ம­தாச மைதா­னத்தில் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்­றது.

இலங்கை அணியின் அதி­ரடித் துடுப்­பாட்ட வீரரும் முன்னாள் அணித்­த­லை­வ­ரு­மான திலகரட்ன டில்­ஷானின் கடைசிப் போட்டி என்­ப தால் இப்­போட்­டியைக் காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசி­கர்கள் நிரம்­பி­யி­ருந்­தனர்.

D2-1

இலங்கை அணி சார்பாக முதலில் துடுப்­பெ­டுத்­தாட களமிறங்கிய போட்­டியின் கதா­நா­ய­கனான டில்­ஷா­னுக்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இரு பக்­க­மாக நின்று துடுப்­பாட்ட மட்டையை மேலே உயர்த்­தி­ய­வாறு மரி­யாதை அளித்­தனர். இதில் டில்ஷான் ஒரு ஓட்­டத்தை மாத்­தி­ரமே பெற்று ஆட்­ட­மி­ழந்தார். இதை­ய­டுத்து மைதா­னத் தில் நிரம்­பி­யி­ருந்­த­வர்கள் எழுந்து நின்று கர­கோ­ஷத்தை எழுப்பி டில்­ஷா­னுக்கு மரி­யாதை செலுத்­தினர்.

இதன்­போது டில்ஷான் அனைவருக்கும் தலை வணங்கினார். பின்னர் முழந்­தா­ளிட்டு கரங்களை மேலே உயர்த்­தி, மைதா­னத்தை முத்­தமிட்டு ரசிகர்­ க­ளுக்கு தனது அன்பு கலந்த மரி­யா­தையை செலுத்­தினார். இப்­போட்­டியில் பந்து வீச்சில் 2 ஓவர்­களை வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்­பற்றி இலங்கை ரசி­கர்­களை பர­வ­ச­ம­டையச் செய்தார்.

இப்­போட்­டியில் இலங்கை அணி 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­டு­களை இழந்து 128 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்டது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தாடிய அவுஸ்­தி­ரே­லியா 6 விக்­கெட்­டு­களை இழந்து 17.5 ஓவர்­களில் 130 ஓட்­டங்­களைப் பெற்று வெற்றியீட்டி 2 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொ டரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

இலங்கை, அவுஸ்­தி­ரே­லியா பங்­கு­கொண்ட கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்று வர­லாறு படைத்தது. எனி­னும், அதன் பின்னர் நடை­பெற்ற சர்­வ­தே­ச ஒரு நாள் போட்டித் தொடரை 4 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இப்போட்­டி நிறை­வ­டைந்­ததன் பின்னர் டில்ஷான், மைதா­னத்தில் நிரம்­பி­யி­ருந்த ரசிகர்க ளுக்கு கைலாகு கொடுத்து தனது நன்றியைத் தெரி­வித்­தி­ருந்தார்.

பரி­ச­ளிப்பின் போது இலங்கை கிரிக்­கெட்­டுக்கு இவர் ஆற்­றிய சேவையைப் பாராட்டி இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தால் டில்­ஷா­னுக்கு நினைவுச் சின்­ன­மொன்று வழங்­கப்­பட்­டது. 1976ஆம் ஆண்டு ஒக்­டோபர் 14ஆம் திக­தியன்று களுத்­து­றையில் பிறந்த தில­க­ரட்ண டில்ஷான், சிறுவயது முதலே கிரிக்கெட் மீது ஆர்­வ­மிக்­க­வ­ராக விளங்­கினார். களுத்­துறை மத்­திய வித்தியா லயத்தில் கல்வி பயின்ற அவர், பாட­சாலை மட்ட கிரிக்கெட் போட்­டி­களில் சிறப்­பாக விளை­யாடி, கழக மட்ட போட்­டி­களில் விளை­யாட அழைப்புப் பெற்றார். அதன் பின்னர் இலங்கை ஏ குழாமில் சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யதன் பய­னாக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளை­யாட அவ­ரு க்கு வாய்ப்பளிக்­கப்­பட்­டது.

Dilshan-1

இதன்­படி 1999ஆம் ஆண்டு ஸிம்பாப்வே அணி க்கு எதி­ராக சர்­வதேச ஒரு நாள் போட்­டியில் அறி­மு­க­மானார். துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பு போன்ற சகல துறை­களிலும் சிறப்­பான பங்­க­ளிப்பை ஆற்­றி­யுள்ளார்.

அத்­துடன் விக்கெட் காப்­பிலும் ஈடு­பட்ட இவர், கிரிக்­கெட்டின் சகல துறை­க­ளிலும் பங் கேற்று தனது பன்­முகத் திற­மையை கிரிக்கெட் உலகுக்கு வெளிக்­காட்­டி­யுள்ளார். இவ்­வாறு தனது 17 வருட கால கிரிக்கெட் வாழ்க்­கையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்­க­ளிப்புச் செய்து ள்ளார். சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் 87 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள இவர், 16 சதங் கள், 23 அரைச்­ச­தங்கள் அடங்­க­லாக 5492 ஓட்­டங்­களை குவித்­துள்ளார்.

மேலும் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் 330 போட்­டி­களில் பங்­கேற்று 22 சதங்கள், 47 அரைச்ச­தங்கள் அடங்­க­லாக 10,290 ஓட்­டங்­களை பெற்­றுக் ­கொண்டு உலக தரத்தில் 10 ஆயிரம் ஓட்டங்­க ளைக் குவித்த 11ஆவது வீர­ரா­கவும் 4ஆவது இலங்­கை­ய­ரா­கவும் தனது பெயரை நிலை­நாட்­டினார்.

D3

மேலும், சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 அரங்கில் 1889 ஓட்­டங்­களைக் குவித்து இவ்­வகைப் போட்டியில் அதிக ஓட்டங்­களை குவித்த இரண்­டா­மவர் என தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்

பந்­து­வீச்­சிலும் சிறப்­பாக செயற்­பட்ட திலக ரட்ண டில்ஷான், டெஸ்ட் அரங்கில் 39 விக்­கெட் டுக­ளையும், ஒருநாள் அரங்கில் 106 விக்­கெட்­டு­க­ளையும், இரு­ப­துக்கு 20 அரங்கில் 9 விக்கெட்டு­க ளையும் கைப்­பற்­றி­யுள்ளார் கிரிக்கெட் சாத­னைகள் பல காணப்­பட்­டாலும், திலகரட்ண டில்ஷானுக்கு மாத்திரமே உரித்தான புதுமையான சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை குவித்து, 100 விக்கெட்டுகளுக்கு (109) மேல் கைப்பற்றி 100இற்கு அதிகமான பிடிகளை (123) எடுத்து, விக்கெட் காப்பில் ஒரு ஸ்டம்பை புரிந்த கிரிக்கெட் வரலாற்றின் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்ஷான் மாத் திரமே என்பதாகும்.

D4

Related posts: