தொடர்ந்தும் தலைவராக நீடிக்க அலஸ்டைர் குக்கிற்கு வாய்ப்பு!
Sunday, December 25th, 2016
இந்தியாவிற்கு எதிரான தொடரை இழந்தாலும், இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டைர் குக் அணித்தலைவர் பதவியில் ஆஷஸ் தொடர் வரை நீடிக்க வாய்ப்புள்ளததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 0-–4 என படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியால் இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டைர் குக்கின் தலைவர் பதவி பறிபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஷஸ் தொடர் வரை அவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு அணி வீரர்களும், துணை பயிற்சியாளர் பால் பேர்பிராஸ் ஆகியோர் துணையாக நிற்கிறார்கள்.
அணி 0-–4 என படுதோல்வியை சந்தித்தது மோசமான விளைவுதான் என்றாலும், வீரர்களின் அறையில் எந்த சலசலப்பும் இல்லை. அதேபோல் அணி நிர்வாகம் குக்கை ஆஷஸ் தொடர் வரை நீடிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அணியின் மற்ற வீரர்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த வீரர். அதேபோல் மிகவும் பிரபலம் வாய்ந்த தலைவர். குக்கைதலைவர் பதவியில் இருந்து தூக்கினால், அது அவமான செயலாகும். ஏனென்றால், அவரை நாங்கள் அணியில் கொண்டு செல்ல விரும்புகிறோம். அடுத்த ஆஷஸ் தொடர் வரை அவர் தலைவராக நீடிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். தனிப்பட்ட நிலையில் என்னுடைய கருத்தும் இதுதான்.’’ என்றார்.
Related posts:
|
|