கொரோனா வைரஸ் தொற்று: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் Zafar Sarfaraz பலி!

Wednesday, April 15th, 2020

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் Zafar Sarfaraz உயிரிழந்துள்ளார்.

50 வயதான Zafar Sarfaraz கடந்த மூன்று நாட்களாக பெஷாவாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Zafar Sarfaraz 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்ததுடன் பெஷாவார் அணிக்காக 616 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

1994 ஆம் ஆண்டு ஓய்வுபெறுவதற்கு முன்னர் அவர் ஆறு ஒரு நாள் போட்டிகளில் 96 ஓட்டங்களை பெற்றிருந்தார். 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெஷாவார் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அணிகளின் பயிற்சியாளராக பதவி வகித்தார்.

Zafar Sarfaraz சகோதரரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரருமான Akhtar Sarfraz குடல் புற்றுநோய் காரணமாக 10 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். பாகிஸ்தானில் சுமார் 5 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 744 பேர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவார் நகரை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: