தொடரை வென்றது இங்கிலாந்து – 55 வருட வரலாற்று சாதனை படைத்து அசத்தல்!

Wednesday, November 28th, 2018

இலங்கை அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியுள்ளதால், இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடர், டி20 தொடர், தற்போது டெஸ்ட் போட்டி என மூன்று தொடரையும் கைப்பற்றி இங்கிலாந்து அணி அசத்தியுள்ளது.

சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணியோ ஒரு தொடரைக் கூட கைப்பற்ற முடியாமல் ரசிகர்களின் கோபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு இது 55 வருட வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது.

இங்கிலாந்து அணி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் 55 வருடங்களுக்கு பின்னர் பெற்றுள்ள வைட்வாஷ் தொடர் இது ஆகும்.

இதற்கு முன்னர் 1963-ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் வைத்து, அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது.

அத்துடன் இந்த வைட்வொஷ் வெற்றியானது இலங்கையில் வைத்து இங்கிலாந்து அணி பெற்ற முதல் வைட்வொஷ் வெற்றியாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: