தேசியமட்டப் பளுதூக்கல் –  வடக்குக்கு 9 பதக்கங்கள்!

Tuesday, December 25th, 2018

இலங்கைப் பளுதூக்கல் சம்மேளனத்தால் நடத்தப்படும் பளுதூக்கல் தொடரில் வடமாகாணத்துக்கு 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கொழும்பு டொறிங்டன் விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இளநிலைப் பிரிவில் அபிசா 49 கிலோ எடைபிரிவில் 95 கிலோ பளுவைத்தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். கே.றஜீனா 71 கிலோ எடைப்பிரிவில் 121 கிலோ பளுவைத் தூக்கி தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்தார். 87 கிலோ எடைப்பிரிவில் மேரி லக்சிகா 101 கிலோ பளுவைத் தூக்கி தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்தார். சுகனியா 81 கிலோ எடைப்பிரிவில் 140 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இளநிலைப் பிரிவில் விஜிதா 40 கிலோ எடைப்பிரிவில் 60 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆன்பியுலா 55 கிலோ எடைப்பிரிவில் 81 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். நிருசா 76 கிலோ எடைப்பிரிவில் 75 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைச் சுவிகரித்தார்.

மூத்த வயதுப்பிரிவில் சுஸ்மிதாகினி 64 கிலோ எடைப்பிரிவில் 93 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இளநிலைப் பிரிவில் தனுசியா 71 கிலோ எடைப்பிரிவில் 92 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

அபிசாக்

சுஸ்மிமதாகினி

தனுசியா

நிருசா

மேரி-லக்சிகா

றெஜினா

Related posts: