தவானுடனான கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவமானது –தசுன் ஷானக்க!

உலகளாவிய பெருந்தொற்றுக்கு மத்தியில் உயிர்குமிழி முறைமையை பின்பற்றி இலங்கை அணியை புத்தெழுச்சி பெறச் செய்த இந்திய – இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்றிரவுடன் நிறைவுபெற்றது.
எனினும், இந்த தொடர் முழுவதும் மிகவும் விசேடமான சில விடயங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்ததுடன், இரு அணிகளுக்கும் இடையிலான நட்பு ரீதியான கலந்துரையாடல் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்திய சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யாவினால் சுற்றுப்பயணம் முழுவதும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்க முடிந்ததுடன், அவரது நட்பு இலங்கை ரசிகர்கள் மனதில் நீண்டகாலம் நினைவில் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கை வீரர்கள் தேசிய கீதத்தை பாடியபோது, அவர்களுடன் சேர்ந்து ஹர்திக்கும் பாடினார். மேலும் வளர்ந்து வரும் சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்னவுக்கு கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டையை பரிசளித்திருந்தார்.
மேலும், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட், பல சந்தர்ப்பங்களில் இலங்கை அணிக்கு ஆலோசனைகளையும் வழங்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஒரு கட்டத்தில், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்கவுடன் உரையாடிய விடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இறுதியும், மூன்றாவதுமான இருபதுக்கு 20 போட்டிக்கு முன், இந்திய அணித்தலைவர் ஷிகர் தவான் நேற்று இலங்கை குழாமினருடன் ஆர்.பிரேமதாச மைதானத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவருடன் உரையாடலில் இணைந்த தலைவர் தசுன் ஷானக,ஷிகர் தவானுடனான உரையாடல் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
பத்து வருடங்களுக்கும் மேலாக விளையாடிவரும் அனுபவமிக்க வீரரான அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருப்பதாக தசுன் ஷானக்க தெரிவித்தார்.
ஒரு போட்டியின்போது போட்டித் திட்டமிடல் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வது பற்றிய அவரது அனுபவமும் அறிவும் எமது அணியை வழிநடத்துவதில் ஒரு தலைவராக எனக்கு மிகவும் முக்கியமான விடயமாக அமைந்துள்ளது.
எங்கள் முன்னாள் வீரர்களிடமிருந்தும் நாங்கள் ஆலோசனைகளைப் பெறுகிறோம். ஆனால், இது அனுபவம் வாய்ந்த தற்போது விளையாடி வரும் வீரரின் ஆலோசனையைப் பெற ஒரு வாய்ப்பு கிடைத்தது.
எனக்கும் எமது அணியிருக்கும் அந்த வாய்ப்பை அளித்ததற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
00
Related posts:
|
|