தலைக்கவசத்திற்கு புதிய விதிமுறை!

Wednesday, January 18th, 2017

கிரிக்கெட்டில் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணிவதில் வீரர்கள் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வற்புறுத்தப்படாவிடினும் அணியும் தலைக்கவசங்கள் குறிப்பிட்ட பிரித்தானிய தகுதிக்குட்டதாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மாசி 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. இந்த விதியை மீறும் துடுப்பாட்ட வீரர்கள் முதல் இரு தடவை எச்சரிக்கை செய்யப்படுவர்கள், பின் இத் தவறு தொடருமாயின் 3ஆவது தடவை ஒரு போட்டியில் விளையாடுவதிலிருந்து நீக்கப்படுவார்கள் அண்மைக் காலமாக கிரிக்கெட் வீரர்கள் பவுண்சர் பந்து வீச்சால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

albion-original-98

Related posts: