தரவரிசைபட்டியலில் இடம்பிடித்த ரங்கன ஹேரத்!

Monday, November 12th, 2018

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர டெஸ்ட் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், சமீபத்தில் ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு காலே மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானவர், இலங்கை அணியின் ரங்கன ஹேரத்.

தற்போது 40 வயதை தாண்டிய அவர், காலே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியுடன் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து ஹேரத், 3 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார். தன்னுடைய வாழ்நாளில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற இலங்கை அணியின் ரங்கன ஹேரத், 7 வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

Related posts: